நடந்து முடிந்த ஒன்பதாவது சரிபார்ப்பு தேர்தலில், தொடர் எட்டாவது வெற்றியை, பரிசளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். BSNLEU சங்கம் வெற்றி பெறுவதற்கு, கடுமையாக களப்பணியாற்றிய, BSNLEU சங்க மாநில, மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகளுக்கும், முன்னணி ஊழியர்களுக்கும், தோழமை சங்க தோழர்களுக்கும், மாற்று சங்கத்தில் இருந்து நமக்கு வாய்ப்பளித்த நல் உள்ளங்களுக்கும்,நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியர்கள் என அனைவரின் உழைப்பும் இந்த வெற்றியில் அடங்கியுள்ளது. அனைவருக்கும் நன்றி!
மாங்கனி மாவட்டத்தில், எட்டாக்கனியாய் இருந்த வெற்றியை, எட்டி பறிக்க, ஏணியாய், வரிசை எண் எட்டில் வாக்களித்து, எட்டும் கனியாக கைகளில் கிடைக்க செய்த, சேலம் மாவட்ட வாக்காளர் தோழர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி!