12.10.2022 அன்று நடைபெற்ற, 9வது சரிபார்ப்பு தேர்தலில், நாடு முழுவதும் 94.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழ் மாநிலத்தில், 98.38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில், வரலாற்று சாதனையாக, 100 சதவீத வாக்குபதிவு நடந்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 248 வாக்காளர்கள் இருந்தனர். ஒரு வாரத்திற்கு முன்பு, ஒரு வாக்காளர் BSNL நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்டார் (RESIGNATION FROM SERVICE). அவர் வாக்களிக்க முடியாது. மீதமுள்ள, 247 வாக்குகளில், 247 வாக்குகளும் பதிவாகியுள்ளது, பாராட்டுக்குரியது.
100 % வாக்குப்பதிவை உறுதி செய்த சேலம் மாவட்ட வாக்காளர்களுக்கும், செல் சின்னத்திற்கு வாக்கு கேட்டு, கடுமையாக உழைத்த, BSNLEU மாவட்ட, மாநில, கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள், சகோதர சங்க தோழர்கள், அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
சிறப்பான ஏற்பாடுகள் செய்து, வெற்றிகரமாக வாக்கு பதிவை நிறைவு செய்த சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் நமது பாராட்டுக்கள்.