BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின், "கிளைச் செயலர்கள்" கூட்டம், நேற்று (05.11.2022), BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர் S. ஹரிஹரன், தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலர் தோழர் R. முருகேசன், வரவேற்புரை வழங்கினார்.
தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் R. ரமேஷ், துவக்கவுரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர் E. கோபால், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி விளக்கவுரை வழங்கினார். கிளை செயலர்கள், வந்திருந்த மாவட்ட சங்க நிர்வாகிகள் முழுமையாக விவாதத்தில் பங்குபெற்றனர்.
11.11.2022 மதுரை விரிவடைந்த மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வது, மாவட்ட சங்கம் சார்பாக, சேலம் நகர பகுதியில், நன்றி அறிவிப்பு வெற்றி விழா கூட்டம் நடத்துவது, BSNLWWCC உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு அகில இந்திய கருத்தரங்கத்தில் கலந்து கொள்வது, நிதி வழங்குவது, மாவட்ட அளவிலான பிரச்சனைகளை உரிய மட்டத்தில் எடுப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
மேட்டூர் கிளை செயலர் தோழர் M. கோபாலன், மாவட்ட உதவி செயலர் தோழர் G. R. வேல்விஜய், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் R. முருகேசன், ஆகியோர் நன்றி அறிவிப்பு, வெற்றி விழா கூட்டத்திற்கு தலா ரூ 5000.00 நன்கொடை வழங்குவதாக பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் அறிவிப்பு வழங்கினர்.
கையில் இருந்த, ரூபாய் ஆயிரத்தை முதல் தவணையாக தோழர் M. கோபாலன் வழங்கினார். உடனடியாக மாவட்ட அமைப்பு செயலர் தோழர் R. முருகேசன் கையில் இருந்த, ரூபாய் ஆயிரத்தை முதல் தவணை நன்கொடையாக அவரும் வழங்கினார். தோழர்களுக்கு மாவட்ட சங்கம் சார்பாக நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள். மாவட்ட உதவி பொருளர் தோழர் தங்கவேல் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.