தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தை புரட்சிகரமாக்கிய நெருப்பு தோழர் K.G.போஸ். 1946 தாபால்காரர் வேலை நிறுத்தம் இவரை தொழிற்சங்க பணிகளில் ஈர்த்தது. 1949 ல் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டது மற்றுமொரு திருப்புமுனையாக அவருக்கு அமைந்தது.
NFPTE சம்மேளனத்தை உருவாக்குவதிலும், 1960,1968 வேலை நிறுத்தங்களிலும் மகத்தான பங்கை செலுத்தியவர். 1970 விஜயவாடா கவுன்சிலில் தோழர்.O.P.குப்தா தலைமையை தோற்கடித்து தோழர்.K.G.போஸ் NFPTE சம்மேளனத் தலைவராகவும் Com.A.S.ராஜன் சம்மேளன மாபொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுத்தப்பட்டனர்.
1971 ல் நடைபெற்ற பெடரல் கவுன்சிலில் தோழர்.K.G.போஸ் அணியினருக்கு பெரும்பான்மை இருந்தும் போட்டிப் பட்டியல் வெளியிட்ட தோழர்.O.P குப்தாவிற்கு அரசின் அங்கீகாரம் கிடைத்தது. பெரும்பான்மையுடன் இருந்த தோழர்.K.G.போஸ் அவர்கள் அரசின் அங்கீகாரம் இல்லாமலே தொழிற்சங்கப் பணியாற்றினார்.
போனஸ் மற்றும் இதர கோரிக்கைகளுக்காக 1974 ல் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றபோது தோழர்.K.G.போஸ் நாடு முழுவதும் பயணம் செய்து 1974 வேலைநிறுத்த தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டார். அநீதி கண்டு வெகுண்டு எழுந்து போராடாமல் அநீதி களைய முடியாது என்ற முழக்கத்தை முன் நிறுத்தியவர்.
Struggle for Unity! Unity for Struggle!! என்ற கோட்பாட்டை வலியுறுத்தி அதற்காக செயல்பட்டவர். K.G.போஸ் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் அரசு ஊழியருக்கான சம்பள கமிஷன் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து தொழிற்சங்கப் பணியாற்றியவர் சிகிச்சைக்காக லண்டன் மருத்துவமனையில் இருந்தபொழுது 11.12.1974 ல் இயற்கை எய்தினார். தோழர்.K.G.போஸ் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.