Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, December 2, 2022

ஊதிய மாற்ற பேச்சு வார்த்தைக் குழு கூட்டத்தின் முக்கிய தகவல்கள்


ஊதிய மாற்ற பேச்சு வார்த்தைக் குழுக்கூட்டம் 02.12.2022 அன்று நடைபெற்றது. 28.11.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தின் பதிவுகள் என நிர்வாகம் வெளியிட்ட விஷயங்கள், திருத்தி கூறப்பட்டுள்ளதால், அதனை திரும்ப பெற வேண்டும் என, BSNL ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் உறுதியாக வலியுறுத்தினர்.

ஊதிய மாற்றத்தை இறுதிப்படுத்தாமல், ஊதிய விகிதங்களை மட்டுமே மாற்ற வேண்டும் என நிர்வாகம் விரும்புவதை, BSNL ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியதோடு, இதனை BSNL ஊழியர் சங்கம் ஏற்றுக்கொள்ளாது என உறுதி பட தெரிவித்தது. கடந்த கூட்டத்தில் நிர்வாக தரப்பு முன்மொழிந்த ஊதிய விகிதங்கள் தொடர்பாக கூறுகையில், எந்த ஒரு தொழிலாளிக்கும், ஊதிய தேக்க நிலை வராத வண்ணம், அந்த ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரியது. தற்போதுள்ள ஊழியர்களுக்கு ஊதிய தேக்க நிலை எப்படி வருகிறது என மத்திய சங்கத்திற்கு வந்த விவரங்களை நிர்வாக தரப்பிற்கு, BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே அனுப்பியுள்ளது.

5 சதவிகித ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய ஊதிய மாற்றம் தேவை என BSNL ஊழியர் சங்கம் கோரியது. அலவன்ஸ்களும் மாற்றப்பட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஊழியர்களுக்கு ஊதிய தேக்க நிலை வருவதை கணக்கில் கொண்டு, ஊதிய விகிதங்கள் மாற்றுவது தொடர்பாக விரிவான விவாதங்கள் நடைபெற்றது.அதே சமயம், பூஜ்யம் சதவிகித ஊதிய நிர்ணய பலனுடனும், அலவன்ஸ்களில் மாற்றமும் இல்லாமல் தான் ஊதிய மாற்றம் நடைபெறும் என நிர்வாக தரப்பு தெரிவித்தது.

ஊதிய தேக்க நிலை வரும் பிரச்சனைகளை கணக்கில் கொண்டு, அடுத்த ஊதிய மாற்ற பேச்சு வார்த்தைக் குழு கூட்டத்திற்கு முன், ஊதிய விகிதங்கள் தொடர்பாக தனியாக விவாதிப்பது என ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய, மாநில சங்கங்கள்