புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு, மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள் போராடி வருகின்றன. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்குவது என்பது தற்போது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக மாறி வருகிறது. தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் காரணமாகவே, இது நிகழ்ந்துள்ளது என்பதை நாம் புரிந்துக் கொள்வது அவசியம்.
ராஜஸ்தான், சட்டிஸ்கர், ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டங்கள், அமலாக்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில், இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ், ஆட்சிக்கு வந்துள்ளது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்குவோம் என வாக்குறுதி வழங்கியிருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இமாசல பிரதேச அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே, அந்த மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலாக்க முடிவு செய்யப்பட்டது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய, மாநில சங்கங்கள்