பெண் மல்யுத்த வீரர்களின் மீதான பாலியல் சுரண்டல்களுக்கு எதிராக, 27.01.2023 அன்று மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம், நாடு தழுவிய அளவில் நடத்த, BSNLWWCC அமைப்பு அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி, சேலம் மாவட்ட சங்கம் சார்பாக, 27.01.2023 இன்று, சேலம் GM அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பயிற்சியின் போது, இளம் மல்யுத்த வீராங்கனைகளின் மீது பாலியல் சுரண்டலில் ஈடுபடுவதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மற்றும் இதர பல பயிற்சியாளர்கள் மீது, ஒலிம்பிக் பதக்கம் பெற்ற பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், காமன்வெள்த் விளையாட்டில் பதக்கம் வென்ற வினேஷ் போகத் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வீரர்கள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு தர்ணா போராட்டம் கூட நடத்தியுள்ளனர்.
பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டை கூறிய உள்ள விளையாட்டு வீரர்கள் அனைவரும், மிகவும் நம்பிக்கையானவர்கள். கடந்த 10 ஆண்டுகளில், தனக்கு தெரிந்த 10 முதல் 20 விளையாட்டு வீராங்கனைகள், தேசிய பயிற்சியின் போது, பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். +
இந்தக் குற்றவாளிகளின் மீது அரசாங்கம், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, 27.01.2023 அன்று மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென, BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு (BSNL WWCC) அறைகூவல் விடுத்துள்ளது. இந்த மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட மற்றும் மாநில சங்கங்களையும், மத்திய சங்கம் கேட்டுக்கொள்கிறது.