07.02.2023, செவ்வாய்க்கிழமை,
காலை 11.30 மணி அளவில்
சேலம் GM அலுவலகம்
ஊதிய மாற்ற பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க, BSNLல் உள்ள அனைத்து NE ஊழியர் சங்கங்களின் கூட்டம், காணொளி காட்சி மூலம், 23.01.2023 அன்று நடைபெற்றது. BSNLEU, NFTE, BTEU, FNTO, SNATTA, BSNL MS, ATMBSNL மற்றும் BSNLEC ஆகிய சங்கங்களின் பொதுச்செயலாளர்கள், இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
நீண்ட விவாதங்களுக்கு பின்னர் கீழ்கண்ட முடிவுகள், ஏகமனதாக எடுக்கப்பட்டன:-
1) “JOINT FORUM OF NON-EXECUTIVE UNIONS AND ASSOCIATIONS OF BSNL” என்ற பெயரில் ஒரு புதிய ஒன்றுபட்ட அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின், தலைவராக NFTE சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சந்தேஸ்வர் சிங் அவர்களும், அமைப்பாளராக, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்களும் செயல்படுவார்கள்.
2) JOINT FORUM மூலமாக கீழ்கண்ட பிரச்சனைகள் எடுக்கப்படும்:-
அ) ஊதிய மாற்றத்தை விரைவில் தீர்வு காண்பது.
ஆ) ஊழியர்களுக்கான புதிய பதவி உயர்வு கொள்கை உருவாக்குவது.
இ) BSNL 4G மற்றும் 5G சேவைகளை விரைவில் துவங்குவது
3) இந்த கோரிக்கைகளை தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, 07.02.2023 அன்று மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தை நடத்துவது.
4) இந்த அமைப்பின் நேரடியான கூட்டம் 07.02.2023 அன்று டெல்லியில் நடைபெறும். அதில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்படும்.
அதன்படி சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பாக. 07.02.2023 அன்று, சேலம் GM அலுவலகத்தில், காலை 11.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாவட்டம் முழுவதுமுள்ள தோழர்கள் திரளாக இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
குறிப்பு: BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவும், இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், AIBDPA - TNTCWU சங்க தோழர்களும், இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.