Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, January 14, 2023

CMD BSNLக்கு BSNLEU மற்றும் NFTE BSNL சங்கங்களின் இணைந்த கடிதம்.


ஊதிய பேச்சு வார்த்தை தொடர்பாக, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் NFTE BSNLன் பொதுச்செயலாளர் தோழர் சந்தேஸ்வர் சிங், ஆகியோர் இணைந்து, CMD BSNLக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கீழ்கண்ட விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:-

1) ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதங்கள், 27.07.2018 அன்று நடைபெற்ற ஊதிய பேச்சு வார்த்தைக் குழுக் கூட்டத்திலேயே இறுதி செய்யப்பட்டு விட்டன. ஆனால், தற்போது, ஓய்வூதிய பங்களிப்பு தொகையில், நிறுவனத்தின் செலவை குறைப்பது என்ற பெயரில், அந்த ஊதிய விகிதங்களின், குறைந்த பட்ச அளவு மற்றும் அதிகபட்ச அளவு ஆகியவற்றை குறைக்க நிர்வாக தரப்பு விரும்புகிறது. அதிகாரிகளுக்கான ஊதிய விகிதங்களை, மூன்றாவது ஊதிய மற்றக் குழு ஏற்கனவே வழங்கி விட்டது. அந்த ஊதிய விகிதங்களை குறைப்பதற்கு, நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை. பின்னர் ஏன், ஊழியர்களின் ஊதிய விகிதங்களை குறைக்க நிர்வாகம் விரும்புகிறது.

2) தற்போது ஊதிய மாற்ற உடன்பாட்டில் கையெழுத்திட தாங்கள் விரும்பவில்லை என்றும், ஊழியர்களுக்கான ஊதிய விகிதங்களை இறுதி செய்து, DoTக்கு அனுப்பவே விரும்புவதாக நிர்வாகம் தெரிவிக்கின்றது. இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

3) அலவன்ஸ்களை தற்போது மாற்ற இயலாது என நிர்வாகம் கூறுகிறது. BSNL நிறுவனம் ஆரம்பித்ததிலிருந்து, ஊழியர்களின் அலவன்ஸ்கள் மாற்றப்படவில்லை. எனவே, அலவன்ஸ்களும் மாற்றப்படவேண்டும்.

எனவே, இவற்றில் CMD BSNL தலையிட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் மற்றும் NFTE BSNL சங்கங்களின் பொதுச்செயலாளர்கள், CMD BSNLஐ கேட்டுக் கொண்டுள்ளனர்.

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய, மாநில சங்கங்கள்