24.02.2023 - வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணி அளவில்
சேலம் மெயின் தொலைபேசி நிலையம்.
24.02.2023 அன்று வாயிற்கூட்டங்களை கூட்டி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என BSNLEU, AIBDPA மற்றும் BSNLCCWF சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, CoC, அறைகூவல் விடுத்துள்ளது. 05.04.2023 அன்று புதுடெல்லியில் நடைபெற உள்ள தொழிலாளி - விவசாயி பேரணியின் கோரிக்கைகளை பிரச்சாரம் செய்வதற்காகவே, இந்த வாயிற்கூட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும், நடத்த அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான மத்திய, மாநில ஒருங்கிணைப்பு குழுவின் முடிவுகள், பேரணியின் கோரிக்கைகள், ஆகியவற்றை நாம் ஏற்கனவே பகிர்ந்து இருந்தோம்.
சேலம் மாவட்டத்தில், இந்த இயக்கத்தை வெற்றிகரமாக்க, BSNLEU - AIBDPA - TNTCWU அமைப்பின் தோழர்கள் கலந்து பேசி, இயக்கத்தை 24.02.2023 அன்று சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில் நடத்துவது என முடிவு எடுத்துள்ளோம். இந்த கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து மூன்று சங்க தோழர்களும் திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
காலை 10.30 மணி அளவில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பெருந்திரளான ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களை திரட்ட வேண்டும். BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க சார்பு கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் கிளை அளவில், தோழர்களை அனுகி, இயக்கத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என தோழமையோடு கேட்டு கொள்கிறோம்.
தோழமையுள்ள, கன்வீனர், சேலம் மாவட்ட CoC