14 மாநிலங்களில், TT இலாகா தேர்விற்கான காலிப்பணியிடங்கள் இல்லாததால், நேரடி தேர்ந்தெடுப்பு கோட்டாவில் (DIRECTO RECRUITMENT) இருந்து 50% பதவிகளை மடை மாற்றம் செய்ய வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை. டெலிகாம் டெக்னீசியன் இலாகா தேர்வு நடத்துவதற்கான கடிதத்தை, கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்தக் கடிதத்தில், 15 மாநிலங்களில் மட்டுமே காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், மீதமுள்ள தமிழ் நாடு உள்ளிட்ட14 மாநிலங்களில் காலி பணியிடங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காலிப்பணியிடங்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள தகுதியான ஊழியர்கள் மத்தியில், கடுமையான அதிருப்தி உருவாக்கி உள்ளது.
இந்த பிரச்சனையை, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள திரு சௌரப் தியாகி PGM(Estt.) அவர்களிடம், 09.02.2023 அன்று விவாதித்தார். TT இலாகா தேர்வு நடத்துவதற்கு, அனைத்து மாநிலங்களிலும் காலிப் பணியிடங்கள் உருவாகும் வகையில், நேரடி தேர்ந்தெடுப்பு கோட்டாவில் (DIRECT RECRUITMENT QUOTA) இருந்து 50 சதவிகித பதவிகளை இலாகா தேர்விற்கு மடைமாற்றம் செய்ய வேண்டும் என தோழர் P.அபிமன்யு கோரினார். BSNL ஊழியர் சங்கத்தின், இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக, PGM(Estt.) பதிலளித்தார்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்