2021ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்ளுக்கான JE இலாகா தீர்வை விரைவில் நடத்த வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், நிர்வாகத்தை தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. இந்த தேர்விற்கான அறிவிப்பை, கார்ப்பரேட் அலுவலகம், 28.02.2023 அன்று வெளியிட்டுள்ளது.
இந்த தேர்வுக்கும், 13 மாநிலங்களில் மட்டுமே, காலிப்பணியிடங்கள் உள்ளன. JE இலாகா தேர்விற்கும், நேரடி நியமன காலிப்பணியிடங்களை மடை மாற்றம் செய்ய வேண்டும் என ஏற்கனவே, BSNL ஊழியர் சங்கம், நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது என்பதை சுட்டிக்காட்ட படுகிறது. இந்த பிரச்சனையை, நிர்வாகத்திடம் விவாதித்து, விரைவில் தீர்வு காண முடியும் என மத்திய சங்கம் கருதுகிறது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்