விருப்பப்படும் BSNL ஊழியர்களுக்கான மருத்துவ குழுக்காப்பீட்டு திட்டத்தை, 01.06.2023 முதல் நிர்வாகம் அமலாக்குகிறது. இதற்காக, ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனத்திடம் ஒரு உடன்பாட்டை போட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 15.05.2023 முதல் 21.05.2023 வரை விருப்பம் தெரிவிக்கலாம். ஒருவர் விருப்பம் கொடுத்த பின்னர், திரும்ப பெற விரும்பினால், 22.05.2023 முதல் 23.05.2023 வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
5 லட்ச ரூபாய்க்கான பாலிசிக்கன ப்ரீமியம் தொகை கீழ்கண்டவாறு இருக்கும்:-
தனக்கும் தன் வாழ்க்கை துணைக்கும் = ரூ. 23,002/-
தனக்கும் தன் வாழ்க்கை துணைக்கும், 3 குழந்தைகளுக்கும் = ரூ.24,222/-
தனக்கும் தன் வாழ்க்கை துணைக்கும், 3 குழந்தைகளுக்கும் ஒரு பெற்றோருக்கும் = ரூ..40,011/-
தனக்கும் தன் வாழ்க்கை துணைக்கும், 3 குழந்தைகளுக்கும் 2 பெற்றோருக்கும் = ரூ.55,495/-