Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, May 21, 2023

சிறப்புமிக்க மாவட்ட செயற்குழு கூட்டம்


20.05.2023 அன்று, மாவட்ட சங்க அலுவலகத்தில், சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு, தோழர் S.  ஹரிஹரன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, BSNLEU சங்க கொடியை மாவட்ட உதவி தலைவர் தோழர் P. தங்கராஜு விண்ணதிரும்  கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். மாவட்ட அமைப்பு செயலர் தோழர் R. முருகேசன், அஞ்சலியுறை நிகழ்த்த, மாவட்ட உதவி செயலர் தோழர் K. ராஜன் வரவேற்புரை வழங்கினார்.

தலைமையுரைக்கு பின், BSNLEU தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் R. ரமேஷ்,  முறைப்படி செயற்குழுவை துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, மாவட்ட செயலர் தோழர் E. கோபால், அறிமுகவுரை வழங்கினார். 

பின்னர், கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்குபெற்றனர். இடையே, AIBDPA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M. செல்வம் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விவாதத்திற்கு மாவட்ட செயலர் பதிலளித்து தொகுப்புரை வழங்கியபின், கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

1. வருகிற ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள, JOINT FORUM இயக்கங்களை, சேலம் மாவட்டத்தில் வெற்றிகரமாக அமுலாக்குவது. சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி, டில்லி பயணம் ஆகிய இயக்கங்களில், மாநில சங்க வழிகாட்டுதல் படி பங்குபெறுவது.

2. வருகிற ஜூன், ஜூலை மாதங்களில், புதிய உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது.

3. சேலம் மாவட்ட நிர்வாகத்தின், தன்னிச்சேயான, உள்ளூர் மாறுதல் உத்தரவை மாற்ற வலியுறுத்தி, நிர்வாகத்துடன் மீண்டும் பேசுவது. தேவைப்பட்டால், தள மட்ட இயக்கம் காண்பது.

4. காலியாக உள்ள மாவட்ட சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு, தோழர்கள் R.  ராதாகிருஷ்ணன், AOS., GM அலுவலகம், A. தாமரைச்செல்வன், JE திருச்செங்கோடு கிளை, D. பிரசாத், AOS.,செவ்வை கிளை ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். தோழியர் C. லாவண்யா, SOA, MAIN CSC., தணிக்கையாளராக நியமிக்கப்பட்டார்.  

5. 9 வது சரிபார்ப்பு தேர்தலுக்கு பின், புதிய LOCAL COUNCIL உறுப்பினர்களாக தோழர்கள் E. கோபால், TT., S. ஹரிஹரன், AOS.,R.  ரமேஷ், JE., M. கோபாலன், JE.,   K. ராஜன், TT.,  K. சண்முகசுந்தரம், TT.,   R. லோகநாதன், AOS., B. வீரேஷ்குமார், JE., ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தோழர் S. ஹரிஹரன் ஊழியர் தரப்பு செயலராக  செயல்படுவார்.

6. 9 வது சரிபார்ப்பு தேர்தலுக்கு பின், புதிய WORKS COMMITTEE உறுப்பினர்களாக, தோழர்கள் P. செல்வம், TT.,  G. R. வேல்விஜய், JE., P. சந்திரன், JE சேலம் மாவட்டத்திற்கும், தோழர்கள் M. சண்முகம், TT., V. பரந்தாமன், TT., M.  பாலசுப்ரமணியம், AOS நாமக்கல் மாவட்டத்திற்கும், ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

7. சேம நல வாரிய கமிட்டி உறுப்பினராக தோழர் R. ராதாகிருஷ்ணன், AOS நீடிப்பார்.  

8. TNTCWU மாவட்ட செயற்குழுவை, விரைந்து கூட்ட உதவி நடவடிக்கைகள் மேற்கொள்வது. அதில், கிளை, மாவட்ட மாநாடுகளை 2023 ஜூன் இறுதிக்குள் நடத்தி முடிக்க வழிகாட்டுதல் வழங்கி உதவுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

10 வது மாவட்ட மாநாட்டிற்கு பிந்தைய, தணிக்கை செய்யப்படாத, வரவு செலவு அறிக்கையை, மாவட்ட பொருளர் தோழர் M. சண்முகம் வழங்கினார். செயற்குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. மாவட்ட உதவி தலைவர் தோழர் P. செல்வம், நன்றி கூறி, கூட்டத்தை முடித்து வைத்தார். எளிமையாக, கச்சிதமான ஏற்பாடுகளை செய்து, வலிமையான செயற்குழுவாக மாற்ற உதவிய, சேலம் நகர கிளை தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் பாராட்டுக்கள்.  

தோழமையுடன், 
E. கோபால்,
மாவட்ட செயலர்