BSNLEU மத்திய சங்க முடிவின்படி, 24.08.2023 அன்று நாடு முழுவதும் உள்ள Dy.CLC, RLC மற்றும் LEO அலுவலகங்களை நோக்கி பேரணி சென்று, ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகளை, மகஜராக கொடுக்க வேண்டும். தமிழ் மாநிலத்தில் 7 மையங்களில், இந்த இயக்கத்தை நடத்த, BSNLEU - TNTCWU தமிழ் மாநில சங்கங்கள் அறைகூவல் கொடுத்திருந்தது. அதன்படி, சேலத்தில் 24.08.2023 அன்று சேலம் தர்மபுரி மாவட்டங்களை சார்ந்த BSNLEU - TNTCWU - AIBDPA மூன்று சங்க ஒருங்கிணைப்பு குழு, CoC, சார்பாக இயக்கம் பிரமாண்டமாக நடைபெற்றது. சேலம் ஜங்க்ஷன் அருகில் உள்ள ரயில்வே ஊழியர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள LEO அலுவலகத்தை நோக்கி பேரணி செல்ல, முதலில் ஜங்க்ஷன் பிரதான சாலையில் கூடி, பின் பேரணியாக சென்று, LEO அலுவலகத்தில் மகஜர் வழங்கினோம்.
அதன்பின் LEO அலுவலக வாயிலில் நடைபெற்ற கோரிக்கை விளக்க கூட்டத்திற்கு, AIBDPA தர்மபுரி மாவட்ட செயலர் தோழர் D. பாஸ்கரன் தலைமை தாங்கினார். BSNLEU மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் M. பாபு, S. ஹரிஹரன், R. ரமேஷ் கருத்துரை வழங்கியபின், TNTCWU மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் C. பாஸ்கர், ஸ்ரீதரன் ஆகியோரும் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
பின்னர் TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M. செல்வம், தர்மபுரி மாவட்ட செயலர் தோழர் ஜோதி, BSNLEU தர்மபுரி மாவட்ட செயலர் தோழர் P. கிருஷ்ணன், சேலம் மாவட்ட செயலர் தோழர் E. கோபால் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். BSNLEU சேலம் மாவட்ட பொருளர் தோழர் M. சண்முகம் நன்றி கூறி இயக்கத்தை நிறைவு செய்து வைத்தார்.
இயக்கத்தில் 100க்கும் மேற்பட்ட நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் திரளாக இரண்டு மாவட்டத்தில் இருந்தும் கலந்து கொண்டனர். இயக்கத்தை வெற்றிகரமாக்கிய இரண்டு மாவட்ட கிளை சங்கங்களை மாவட்ட சங்கங்கள் மனதார பாராட்டுகிறது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர், BSNLEU
M. செல்வம்,
மாவட்ட செயலர், TNTCWU