27.07.2023 அன்று, சேலம் மாவட்ட BSNLEU சங்க அலுவலகத்தில், TNTCWU சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் ஐதராபாத் கூட்ட முடிவுகள் விளக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் K. ராஜன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். தோழர் ஜெய்சங்கர், சேலம் நகரக் கிளை செயலர் வரவேற்புரை வழங்கினார்.
BSNLEU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன் செயற்குழுவை துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். AIBDPA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி வாழ்த்துரை வழங்கினார்.ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, மாவட்டச் செயலர் தோழர் M. செல்வம் அறிமுக உரை வழங்கினார்.
மாவட்ட செயலர் சமர்ப்பித்த ஆய்படு பொருள் மீதான விவாதத்தில், மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆத்தூர் மற்றும் திருச்செங்கோடு கிளை செயலர்கள் ஆறிமுக படுத்தப்பட்டு, கௌரவிக்கப்பட்டனர். நிதி நிலை சம்மந்தமான விவரங்களை வழங்கி தோழர் C. பாஸ்கர், DT & ACS கருத்துரை வழங்கினார்.
விவாதத்திற்கு பதில் அளித்து மாவட்ட செயலாளர் தொகுப்புரை வழங்கிய பின், சேலம் மாவட்ட BSNLEU செயலாளர் தோழர் E. கோபால், சிறப்புரை வழங்கினார். அவர் தம் உரையில், ஹைதராபாத் கூட்ட முடிவுகளை விளக்கி பேருரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து கீழ்க்கண்ட முடிவுகள் ஏக மனதாக எடுக்கப்பட்டது.
1. கிளை மாநாடுகள் நடத்தி முடிக்காத கிளைகள், 2023 ஆகஸ்ட் 10ம் தேதிக்குள், நடத்தி முடிக்க வேண்டும்.
2. கிளைகளை புணரமைக்கும் விதமாக, இனி சேலம் மாவட்டத்தில், ஆத்தூர், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், மேட்டூர் மற்றும் சேலம் நகரம் ஆகிய ஐந்து கிளைகள் மட்டும் செயல்படும். உறுப்பினர் எண்ணிக்கை போதுமான அளவு இருந்தால், சங்ககிரி மற்றும் STR கிளைகள் அமைக்க மையம் முடிவெடுக்கும்.
3. மாவட்ட மாநாட்டை ஆகஸ்ட் இறுதி வாரத்தில் நடத்துவது மாநாட்டு இடத்தை கிளைகளின் கருத்துக்களை உள்வாங்கி, மையம் முடிவு செய்யும்.
4. கொல்கத்தா அகில இந்திய மாநாட்டிற்கு, மாநில சங்கம் அனுமதித்துள்ள இரண்டு சார்பாளர்கள் கலந்து கொள்வர்.
5. மாவட்ட மாநாட்டு நன்கொடையாக, உறுப்பினர்களிடம், ரூ.200 வசூலிப்பது.
6. மாவட்ட மாநாட்டிற்குள் கிளைகளில் இருந்து சந்தாவை வசூலிப்பது
7. ஊதிய நிலுவை பெற தொடர்ந்து போராடுவது
8. மாதா மாதம் உரிய தேதியில் ஊதியம் கிடைக்க தொடர்ந்து இயக்கம் காண்பது.
9. Outsourcing தோழர்களுக்கும், EPF / ESI சமூக பாதுகாப்பு சலுகைகள் உத்தரவாதப்படுத்துவது
10.ஆட்குரைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து போராடி தடுப்பது
11. புதிய புதிய பகுதிகளில், ஒப்பந்த ஊழியர் பணியிடங்கள் உருவாக நிர்வாகத்தோடு பேசுவது.
இறுதியாக, BSNLEU மாவட்ட பொருளாளர் தோழர் M. சண்முகம் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். தோழர்களே! மாவட்ட செயற்குழு முடிவுகளை செம்மையாக அமுல்படுத்துவோம். நமது TNTCWU இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவோம். ஒப்பந்த தொழிலாளியின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து போராடுவோம்.