BSNLEU, CMD BSNLக்கு கடிதம்
24.03.2024க்கு முன், காப்பர் கேபிளில் இயங்கிவரும் தரைவழி தொலைபேசி சேவைகள் அனைத்தையும், FTTH இணைப்புகளாக மாற்றுவது என BSNL நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. தற்போது BSNLல் பணி புரியும் ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும், அவர்களது இருப்பிடங்களில், வாடகை இல்லா தரைவழி தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இணைப்புகளும், FTTHஆக மாற்றப்பட வேண்டும்.
FTTHன் குறைந்த பட்ச கட்டணம், ரூ. 399/-. 40 சதவிகித தள்ளுபடி கிடைத்தாலும், மீதமுள்ள தொகையினை, ஊழியர்கள் கட்ட வேண்டி இருக்கும். அப்போது, ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வாடகையில்லா தரைவழி தொலைபேசி இணைப்பு ஒழிக்கப்படுகிறது என்றே பொருள் படும்.
எனவே, FTTHக்கு மாற்றப்பட்டாலும், ஊழியர்களின் இருப்பிடங்களில், வாடகையில்லா தரைவழி தொலைபேசி இணைப்புகள் தொடர வேண்டுமென BSNL ஊழியர் சங்கம், 10.11.2023 அன்று CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்