Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, November 21, 2023

ஒருங்கிணைப்பு குழு, CoC, கூட்ட முடிவுகள்


BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, CoC கூட்டம், இன்று (21.11.2023)  சேலத்தில், BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில்  நடைபெற்றது. கூட்டத்தில், BSNLEU சார்பாக தோழர் S. ஹரிஹரன், மாவட்ட தலைவர், தோழர் E. கோபால், மாவட்ட செயலர், தோழர் M. சண்முகம், மாவட்ட பொருளர், தோழர் R. ரமேஷ், மாநில அமைப்பு செயலர், AIBDPA சார்பாக தோழர் M.  மதியழகன், மாவட்ட தலைவர், தோழர் S. தமிழ்மணி, மாவட்ட செயலர், தோழர் T. பழனி, மாநில உதவி செயலர் மற்றும் TNTCWU சார்பாக தோழர் K. ராஜன், மாவட்ட தலைவர்,  தோழர் M.. செல்வம், மாவட்ட செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்திற்கு, CoC அமைப்பின் தலைவர் தோழர் S. தமிழ்மணி தலைமை தாங்கினார். தோழர் S. ஹரிஹரன், ACS., BSNLEU வரவேற்புரை வழங்கினார். கூட்டத்தின் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, தோழர் E. கோபால், CoC அமைப்பின் கன்வீனர் அறிமுகவுறை வழங்கினார். ஆய்படு பொருள் மீது, CoC உறுப்பினர்கள், தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள், ஏகமனதாக எடுக்கப்பட்டது.

1. தமிழ் மாநில CoC முடிவின்படி, வருகிற 26.11.2023 முதல் நடைபெறுகின்ற தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், இணைந்த, ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறும் மூன்று நாள் தொடர் "மகா பாதவ்" போராட்டத்தில்,  சேலம் மாவட்டம் சார்பாக, 10 தோழர்கள், 26.11.2023 அன்று மட்டும்  கலந்து கொள்வது. (BSNLEU -5, AIBDPA - 3, TNTCWU - 2)

2.  வருகிற 28.11.2023 அன்று JOINT FORUM போராட்ட அறைகூவல்படி நடைபெறவுள்ள, மனித சங்கிலி போராட்டத்தில், குறைந்தபட்சம் 130 தோழர்களை திரட்டி, சேலம் மெயின் தொலைபேசி நிலையம் முன்பு, CoC சார்பாக நடத்துவது. (BSNLEU - 50, AIBDPA - 40, TNTCWU - 40)

3. AIBDPA  மாவட்ட செயற்குழு முடிவின்படி, நடைபெறவுள்ள, AIBDPA மாவட்ட மாநாட்டிற்கு, CoC தனது முழு உதவியையும், ஒத்துழைப்பையும் நல்குவது.

4. TNTCWU மாவட்ட மாநாட்டை, 2023 டிசம்பர் இறுதி வாரத்தில், மாநில சங்கம் கொடுக்கும் தேதியில், சேலத்தில்  நடத்துவது. CoC முழு உதவியையும், ஒத்துழைப்பையும் நல்குவது. அதற்கு ஏதுவாக, வருகிற 28.11.2023 மதியம், TNTCWU மாவட்ட செயற்குழு கூட்ட, CoC உதவுவது.

5. BSNLWWCC, உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு, அமைப்பு மாநாடு, சேலத்தில் 2024 ஜனவரி மாதத்தில் நடத்துவது. 

CoC முடிவுகளை செம்மையாக அமுல்படுத்துவோம். CoC என்கிற பதாகையின் கீழ் கட்டப்பட்டுள்ள ஒற்றுமையை, மேலும் கெட்டிப்படுத்துவோம்.

தோழமையுடன், 
E. கோபால், 
கன்வீனர், CoC