Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, December 6, 2023

11.12.2023 அன்று AUAB சார்பாக ஆர்ப்பாட்டம்!


சேலம் GM அலுவலகம், மதியம் 12.30 மணி அளவில், 11.12.2023 திங்கட்கிழமை 


ALTTCயை எடுத்துக் கொள்வதாக, 10.11.2023 அன்று, DoT கடிதம் வெளியிட்டது. இந்த செயல், DTS / DTOன் சொத்துக்களை, BSNLக்கு மாற்றுவது என்கிற மத்திய அமைச்சரவையின் முடிவினை, அப்பட்டமாக மீறுவதை தவிர வேறு எதுவும் இல்லை. 

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என AUAB, உடனடியாக தொலை தொடர்பு துறையின் செயலருக்கு கடிதம் எழுதியது. இதற்கு DoTயிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை வராததால், DoTயின் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, 11.12.2023 அன்று சக்தி வாய்ந்த ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும் என AUAB அறைகூவல் விடுத்துள்ளது.

அதன்படி, நமது சேலம் மாவட்டத்தில், BSNLEU, SNEA, AIGETOA, AIBSNLEA, சங்கங்கள் இணைந்து, AUAB பதாகையின் கீழ், சேலம் பொது மேலாளர் அலுவலகத்தில். மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம், 11.12.2023அன்று நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மாவட்டம் முழுவதுமுள்ள தோழர்கள் திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.

தோழமையுடன், 
E. கோபால்,
கன்வீனர், AUAB