Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, February 16, 2024

16.02.2024 ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் மாபெரும் வெற்றி!


தோழர்களுக்கு நெஞ்சு நிறை நன்றிகள்!!

BSNLEU மத்திய சங்க அறைகூவலக்கிணங்க, இன்று (16.02.2024), நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்று உள்ளது. தமிழ் மாநிலத்தில் போராட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. 

நமது சேலம் மாவட்டத்தில், நம்முடைய தோழர்கள் பெருமளவில் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  மாவட்ட சங்கம் கடந்த 10 நாட்களாக நடத்திய களப்பணி அடிப்படையிலும், கிளைச் செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் எடுத்த முன் முயற்சி அடிப்படையிலும், சேலம் மாவட்டத்தில் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒப்பந்த ஊழியர்கள் மாவட்டம் முழுவதும் பெருமளவில் போராட்டத்தில் கலந்து கொண்டு, தங்கள் ஒருநாள் ஊதியத்தை தியாகம் செய்தது பாராட்டக்கூடிய அம்சம். கிளை அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், TNTCWU சங்க தோழர்கள் திரளாக கலந்து கொண்டது, நல்ல விஷயம்.

பணி ஓய்வு பெற்றாலும், நம்மோடு தோளோடு தோளாக, AIBDPA சங்கத் தோழர்களும் பெருமளவு இயக்கத்திற்கு ஆதரவு வழங்கி, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற இடங்களில் முழுமையாக கலந்து கொண்டனர். பல தோழர்கள் அனைத்து சங்க மறியலில் ஈடுபட்டு, கைதாகி, காவலில்  வைக்கப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைப்புக் குழு, CoC சார்பாக நாம் எடுத்த முன் முயற்சிகள், வெற்றி பெற்றுள்ளது. போராட்டத்தில் துணிச்சலுடன் கலந்து கொண்டு ஒரு நாள் ஊதியத்தை தியாகம் செய்த BSNLEU சங்க தோழர்களுக்கு, அந்த தியாகிகளுக்கு, புரட்சிகரமான செவ் வணக்கங்களை, உரித்தாக்கி கொள்கிறோம். 

ஒப்பந்த ஊழியர்களுக்கும் அவருடைய பங்களிப்புக்கு மகத்தான பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். AIBDPA சங்கத் தோழர்கள் பல இடங்களில், இயக்கத்திற்கு வழிகாட்டியாக செயல்பட்டு, உதவியதற்கு அவர்களுக்கும் நெஞ்சு நிறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
E. கோபால், 
மாவட்ட செயலர்