16.02.2024 அன்று நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்கு அறிவிப்பை BSNL ஊழியர் சங்கம் கொடுத்ததின் அடிப்படையில், மரு. கல்யாண் சாகர் நிப்பானி DIRECTOR(HR) அவர்கள், BSNL ஊழியர் சங்கத்தை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். 07.02.2024 அன்று DIRECTOR (HR) அவர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், இந்த வேலை நிறுத்தத்தின் முக்கிய கோரிக்கையான ஊதிய மாற்ற பிரச்சனையில் BSNL நிர்வாகத்தின் எதிர்மறை நிலைபாடு தொடர்பாக, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு கடுமையாக சாடினார்.
கடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில், ஏற்கனவே தொழிற்சங்கங்கள் மற்றும் நிர்வாகம் ஆகிய இரு தரப்பாரும் ஏற்றுக் கொண்ட ஊதிய விகிதத்தை குறைப்பதற்கு, நிர்வாகம் எடுக்கும் நிர்வாகத்தின் எதிர்மறை நிலைப்பாட்டை, ஊழியர் தரப்பு கடுமையாக விமர்சனம் செய்தது. தொழிற் சங்கங்களின் கருத்தை, பேச்சு வார்த்தை குழுவின் நிர்வாக தரப்பிடம் தெரிவிக்கப்படும் என, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற திரு அர்விந்த் வாட்நேர்கர் உறுதி அளித்தார்.
எனினும், அதன் பின் ஊதிய பேச்சு வார்த்தை குழு நடைபெற வில்லை. இந்த செய்தியையும், 07.02.2024 அன்று DIRECTOR (HR)உடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர், புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ஊதிய பேச்சு வார்த்தை குழுவின் கூட்டம் நடைபெறும் என DIRECTOR(HR) உறுதி அளித்தார் .
தற்போது, 05.03.2024 அன்று ஊதிய பேச்சு வார்த்தை குழுவின் கூட்டம் நடைபெறும் என்று நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் BSNL ஊழியர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்