BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம், 21.03.2024 அன்று, சேலம் BSNLEU சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு, தோழர் S. ஹரிஹரன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளர் தோழர் M. சண்முகம் அஞ்சலியுறை நிகழ்த்த, மாவட்ட உதவி செயலர் தோழர் R. ஸ்ரீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.
ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், தோழர் R. ரமேஷ் மாநில அமைப்பு செயலர் கூட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி தோழர் E. கோபால் மாவட்ட செயலர் விளக்கவுரை வழங்கினார். தோழமை சங்கம் சார்பாக தோழர் S. தமிழ்மணி, மாவட்ட செயலர், AIBDPA மற்றும் தோழர் M. செல்வம் மாவட்ட செயலர், TNTCWU ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆய்படு பொருள் மீதான விவாதத்தில், 11 கிளை செயலர்கள், 12 மாவட்ட சங்க நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
விவாதத்திற்கு பதில் அளித்து மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கினார். அமைப்பு தினத்தை தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு அனுஷ்டிப்பது. மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு பொறுப்பு போடப்பட்டு, கிளைகளில் கிளை கூட்டங்களை நடத்துவது, ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்துவது, ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளை தீர்வு காண கூடுதல் முயற்சிகள் மேற்கொள்வது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. தோழர் P. செல்வம் மாவட்ட உதவி தலைவர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.