22.03.2024 அன்று நடைபெற்ற ஊதிய மாற்றக் குழு கூட்ட நிகழ்வுகள் தொடர்பான நகல், MINUTESல் கீழ்கண்ட திருத்தங்களை BSNL ஊழியர் சங்கம் முன் மொழிந்துள்ளது.
ஊதிய தேக்க நிலை தொடர்பான பாரா 2.1ல் கூறப்பட்டுள்ள “…. ஊழியர் தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தால்” என்ற முன் நிபந்தனை ஏதும் நிர்வாக தரப்பில் இல்லாததால், இது போன்ற வார்த்தைகள் நீக்கப்பட வேண்டும்.
அலவன்ஸ்கள் தொடர்பான பாரா எண் 2.2ல்....... வீட்டு வாடகைப்படியை மாற்ற வேண்டும் என்கிற ஊழியர் தரப்பு எழுப்பிய கோரிக்கையினையும், இதில் தலையிடுவதாக நிர்வாகம் கொடுத்த உறுதிமொழியும் கொண்ட அறிக்கையினை இணைக்க வேண்டும் என நமது சங்கம் ஆலோசனை தெரிவித்தது.
இந்த பிரச்சனைகள் தொடர்பாக PGM(SR)க்கு BSNL ஊழியர் சங்கம் ஒரு கடிதம் எழுதியுள்ளது.
தோழர் ஜான் வர்கீஸ்
பொது செயலாளர் (பொறுப்பு)
தகவல்: BSNLEU மத்திய, மாநில சங்கங்கள்