ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள, BSNL ஊழியர்களுக்கான மருத்துவ குழுக்காப்பீட்டு திட்டம் 31.05.2024உடன் நிறைவடைய உள்ளது. இந்த திட்டம் 01.06.2024ல் புதுப்பிக்கப் படுவதற்கு, BSNL நிறுவனம், காப்பீட்டு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப் படுவதற்கான நடவடிக்கைகளை, கார்ப்பரேட் அலுவலகத்தின் நிர்வாக பிரிவு துவக்கி உள்ளது. இது தொடர்பாக விவாதிக்க, 29.04.2024 அன்று ஒரு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் BSNL ஊழியர் சங்கம் பங்கேற்கும்.
தோழர் ஜான் வர்கீஸ்
பொது செயலாளர் (பொறுப்பு)
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்