BSNL ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் பொறுப்பு பொதுச் செயலாளர் தோழர் ஜான் வர்கீஸ் ஆகியோர், 19.04.2024 அன்று PGM(SR) அவர்களை சந்தித்து பதினைந்து நாட்களுக்குள், ஊதிய மாற்றக் குழுவின் கூட்டம் நடத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர். மேலும், ஊதிய மாற்றக் குழுவின் தலைவரிடம் வழங்கியுள்ள, பல் வேறு கேடர்களில், ஏற்படும் ஊதிய தேக்க நிலை மற்றும் ஊதிய குறைவு தொடர்பான 30 பிரச்சனைகளை, PGM(SR) அவர்களிடம் விவரித்தனர். நிர்வாகம் தன்னிச்சையாக அறிவித்துள்ள ஊதிய விகிதங்கள் காரணமாக ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியின் நியாயத்தை தெளிவு படுத்தி உள்ளது.
நமது சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டுள்ள பிரச்சனைகளை தெளிவாக பரிசீலித்த பின் ஊதிய மாற்றக் குழுக் கூட்டத்திற்கு தேதி அறிவிக்கப்படும் என PGM (SR) உறுதி அளித்துள்ளார்.
தோழர் ஜான் வர்கீஸ்
பொது செயலாளர் (பொறுப்பு)
தகவல்: BSNLEU மத்திய, மாநில சங்கங்கள்