22.03.2024 அன்று நடைபெற்ற ஊதிய மாற்றக் குழுக் கூட்டத்தின் தொடர்ச்சியாக, நிர்வாகம் முன்மொழிந்துள்ள புதிய ஊதிய விகிதங்களில், ஊதிய தேக்க நிலை ஏற்பட உள்ள பிரச்சனைகளை, BSNL ஊழியர் சங்கம், நிர்வாகத்திற்கு வழங்கியிருந்தது. அதன் பின், Sr.GM(Estt) திரு S.P.சிங் அவர்களை சந்தித்து, ஊதிய தேக்க நிலை தொடர்பாக விவாதித்தது.
பின்னர் 23.04.2024 அன்று, BSNL ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் பொறுப்பு பொது செயலாளர் தோழர் ஜான் வர்கீஸ் ஆகியோர் ஊதிய மாற்றக் குழுவின் தலைவர் திரு R.K.கோயல் அவர்களை சந்தித்து, ஊதிய தேக்க நிலை பிரச்சனைகள் குறித்து BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே வழங்கியுள்ள கடிதங்கள் தொடர்பாக எடுத்துக் கூறியதோடு, ஊதிய மாற்றக் குழுவின் கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும் என்றும், நமது தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஊதிய விகிதங்கள் மாற்றப்படும் போதே, வீட்டு வாடகைப் படி மாற்றுவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.