BSNL ஊழியர் சங்கம், ஊதிய தேக்க நிலை தொடர்பான உதாரனங்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கையினை நிர்வாகத்திடம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக, 22.04.2024 அன்று BSNL ஊழியர் சங்கம், Sr.GM(Estt) அவர்களிடம் விவாதித்தது. ஒவ்வொரு உதாரனத்தையும், அக்கறையுடன் பரிசீலித்து, அதன் மீதான தனது அறிக்கையினை ஊதிய மாற்றக் குழுவிற்கு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
இந்த சந்திப்பில், BSNL ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா, பொறுப்பு பொது செயலாளர் தோழர் ஜான் வர்கீஸ் மற்றும் தோழர் C.K.குண்டண்ணா AGS ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
தோழர் ஜான் வர்கீஸ்
பொது செயலாளர் (பொறுப்பு)
தகவல்: BSNLEU மத்திய, மாநில சங்கங்கள்