குழுக் காப்பீட்டு திட்டம் புதுப்பிப்பது தொடர்பான கூட்டம், 14.05.2024 மாலை 3.00 மணிக்கு கார்ப்பரேட் அலுவலகத்தின், கூட்ட அறையில் திரு சஞ்சீவ் தியாகி PGM (Admn) தலைமையில் நடைபெற்றது. மேலும் மூன்று அதிகாரிகளும், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். BSNL ஊழியர் சங்கத்தின் சார்பில் தோழர் C.K.குண்டண்ணா AGS மற்றும் தோழர் அஷ்வின் குமார் OS ஆகியோரும் பங்கேற்றனர்.
ஓரியண்டல் காப்பீட்டு கழகம் மற்றும் ஸ்டார் காப்பீட்டு நிறுவனம் ஆகியோரின் முன்மொழிவுகளை BSNL நிர்வாகம் தெரிவித்தது. நீடித்த விவாதங்களுக்கு பின், இந்த ஆண்டு புதுப்பிப்பதற்கு, ப்ரீமியம் தொகை அதிகரிக்கக்கூடாது என்பதே அனைத்து சங்கங்களின் கருத்தாக இருந்தது. மருத்துவ செலவின் ஒரு பகுதியை, BSNL MRS திட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளும் வகையில், மருத்துவ செலவின் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்ளும் வகையிலான விருப்ப முன்மொழிவையும் (CO PAYMENT OPTION) ஒரு சில அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் தெரிவித்தன.
கூட்டத்தின் இறுதியில் ஓரியண்டல் காப்பீட்டு கழகத்தின் பிரதிந்திகள், இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களின் ஒன்று பட்ட முடிவு, ஓரியண்டல் காப்பீட்டு கழகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. ஓரிரண்டு தினங்களில் இதனை இறுதி செய்திட வேண்டும் என BSNL நிர்வாகமும் வற்புறுத்தியது. வந்திருந்த காப்பீட்டு கழக உறுப்பினர்கள், நம்முடைய கருத்துக்களின் மீது இணக்கத்தோடு அணுகியதோடு, BSNL நிர்வாகத்தின் கருத்துக்களை பரிசீலித்து விட்டு, திரும்ப வருவதாக தெரிவித்துள்ளனர்.