குழுக் காப்பீட்டு திட்டம் புதுப்பிப்பது தொடர்பாக, 22.05.2024 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. PGM(Admn.) திரு சஞ்சீவ் தியாகி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் PGM(Estt.), PGM(SR) மற்றும் DGM(Admn.) ஆகியோர் கலந்து கொண்டனர். BSNL ஊழியர் சங்கத்தின் சார்பாக தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா, தோழர் C.K.குண்டன்னா AGS மற்றும் அமைப்பு செயலாளர் தோழர் அஷ்வின் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதர அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டனர்.
ஓரியண்டல் காப்பீட்டு கழகத்தின் இறுதி முன்மொழிவுகளை நிர்வாகம் விளக்கி கூறியது. இதன்படி பிரீமியம் தொகை 1.27% அதிகரிக்கப் பட்டுள்ளது. இந்த பிரீமியம் தொகையின் குறைந்த பட்சம் 50%மாவது நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற BSNL ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை நிர்வாகம், ஏற்றுக் கொள்ளவில்லை.
பிரீமியம் தொகையை இரண்டு தவணைகளில் பிடித்தம் செய்ய வேண்டும் என்பதை, BSNL நிர்வாகமும், ஓரியண்டல் காப்பீட்டுக் கழகமும் ஏற்றுக் கொண்டன. நிர்வாக காரணங்களால், இந்த திட்டம் 01.06.2024 முதல் அமலாக்க முடியாது என்றும், 15.06.2024 முதல் அமலாக்கப்படும் என்றும் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்