BSNL மருத்துவ காப்பீட்டு திட்டம் புதுப்பிப்பது தொடர்பாக 29.04.2024 அன்று ஒரு கூட்டம் நடைபெற்றது. திரு சஞ்சீவ் தியாகி PGM (Admn) தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகத்தின் சார்பில், திருமிகு அனிதா ஜோஹ்ரி PGM (SR), திரு S.P.சிங் PGM(Estt) மற்றும் திரு ராஜீவ் ஷர்மா DGM (A) ஆகியோரும், நமது சங்கத்தின் சார்பில் தோழர் ஜான் வர்கீஸ் Acting GS., தோழர் C.K.குண்டண்ணா AGS மற்றும் திரு அஷ்வின் குமார் OS ஆகியோரும் பங்கேற்ற்னர். ஓரியண்டல் காப்பீட்டு கழகம் முன்மொழிந்துள்ள, புதுப்பிப்பதற்கான கட்டணம் மிக அதிகமாக இருந்ததால், அந்த கட்டணங்களை ஒட்டு மொத்தமாக அனைவரும் நிராகரித்தனர்.
ஒவ்வொரு பிரிவிலும், நாம் செலுத்தும் தொகையையும், அவற்றில் நமது ஊழியர்கள் பெற்ற மருத்துவ கட்டணங்கள் தொடர்பான விவரங்களை, நமது BSNLEU சங்கம் கோரியது. மேலும் இதர நான்கு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்தும், மிகச்சிறந்த ஆறு தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்தும் QUOTATIONகளை கேட்பது என்றும் முன்மொழியப்பட்டது.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் BSNL MRS திட்டத்தின் கீழ் BSNL நிறுவனத்திற்கு 20 கோடி ரூபாய்கள் மிச்சமாகி இருப்பதை கணக்கில் கொண்டு, இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் புதுப்பிக்கப்படும் போது, BSNL நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட சதவிகித தொகையினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் BSNL ஊழியர் சங்கம் கோரியுள்ளது.
ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம் கொடுத்த தகவல்கள்:-
BSNL வழங்கிய மொத்த ப்ரீமியம் தொகை: 12.52 கோடி ரூபாய்கள்
இதுவரை பாலிசி இருந்த காலம்: 278 நாகள்
விருப்பம் தெரிவித்தவர்கள்: 4302
கோரிய CLAIMகள்: 17.22 கோடி ரூபாய்கள்
வழங்கிய CLAIMகள்: 10.19 கோடி ரூபாய்கள்.
நிராகரிக்கப்பட்ட CLAIMகள் :0.28 கோடி ரூபாய்கள்
நிலுவையில் உள்ள CLAIMகள்: 2.71 கோடி ரூபாய்கள்
இதுவரை மொத்தம்: 12.90 கோடி ரூபாய்கள்
இதற்கு மேல் செலவாகும் என கருதப்பட்டது: 10,30,351/- ரூபாய்கள்
தோழர் ஜான் வர்கீஸ்
பொறுப்பு பொது செயலாளர்
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்