BSNL நிறுவனம் 4G சேவையை துவங்குவதில், கடுமையான கால தாமதம் ஏற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மிகப்பெரும் அளவில் வாடிக்கையாளர்கள், BSNLஐ விட்டு விலகி செல்கின்றனர். BSNL நிறுவனத்திடம் 4G/5G சேவைகள் இல்லாததால், மிகபெரும் அளவிலான வாடிக்கையாளர்கள் BSNLஐ விட்டு வெளியேறி வருவதை சுட்டிக்காட்டி, மத்திய தொலை தொடர்பு அமைச்சருக்கு, BSNL ஊழியர் சங்கம், தொடர்ச்சியாக கடிதங்களை எழுதி வருகின்றது. தனது 4G சேவையினை துவங்க, தற்காலிகமாக வொடோபோன் ஐடியாவின் வலைத்தளங்களை பயன்படுத்த BSNLக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அரசாங்கத்தை, BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அரசாங்கம் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பிரச்சனையில், அரசாங்கத்தின் உடனடி தலையீட்டைக் கோரி, BSNL ஊழியர் சங்கம், 16.04.2024 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
2024 மார்ச் மாதம் முடிவடைந்த நிதியாண்டில், BSNLஐ விட்டு 1.8 கோடி வாடிக்கையாளர்கள் வெளியேறியுள்ளதாக, 04.05.2024 தேதியிட்ட THE NEW INDIAN EXPRESS பத்திரிக்கஎ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், 2024 மார்ச் மாதத்தில் மட்டும், 23 லட்சம் வாடிக்கையாளர்கள் BSNLஐ விட்டு வெளியேறியுள்ளதாகவும், அந்த பத்திரிக்கை செய்தி தெரிவிக்கின்றது.
இந்த சூழ்நிலையில், தனது வாடிக்கையாளர்களுக்கு BSNL நிறுவனம், உடனடியாக 4G சேவையை வழங்குவதற்கு ஏதுவாக, பொருத்தமான தலையீட்டை அரசாங்கம் செய்ய வேண்டும் எனக் கோரி, மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு BSNL ஊழியர் சங்கம், மீண்டும் 05.05.2024 அன்று ஒரு கடிதத்தை எழுதியுள்ளது.
தோழர் ஜான் வர்கீஸ்
பொதுச்செயலாளர் (பொறுப்பு)
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்