Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, May 17, 2024

ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் இலவச ஃபைபர் - BSNLEU மீண்டும் கடிதம்


ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும், ஃபைபர் மூலம் இலவச இல்ல தொலைபேசி இணைப்புகள் வழங்க வேண்டுமென BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு மீண்டும் ஒரு கடிதம். 

ஊழியர்களும், ஓய்வூதியர்களும் தேசத்திற்கு ஆற்றிய சேவையினை பாராட்டும் விதமாக, அவர்களுக்கு, இலவச இல்ல தொலைபேசி வழங்கப்பட்டது.  இந்த வசதியை, கடந்த 23 வருடங்களாக ஊழியர்களும், ஓய்வூதியர்களும் அனுபவித்து வருகின்றனர்.  ஊழியர்களின் எந்த ஒரு கோரிக்கையையும் தீர்வு காண, தற்போதுள்ள BSNL நிர்வாகத்திற்கு இயலவில்லை. ஆனால், ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்பட்டிருந்த இலவச இல்ல தொலை பேசி இணைப்புகளை, இந்த நிர்வாகம் பிடுங்கி கொள்கிறது. 

இந்த பிரச்சனையை, தொடர்ச்சியாக எழுப்பி வரும் BSNL ஊழியர் சங்கம், ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும், ஃபைபர் மூலமாக இலவச இல்ல தொலைபேசி இணைப்புகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.  இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி 17.05.2024 அன்று, CMD BSNLக்கு BSNL ஊழியர் சங்கம் மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளது.

தோழர் ஜான் வர்கீஸ் 
பொதுச்செயலாளர் (பொறுப்பு)

கடிதம் காண இங்கே சொடுக்கவும் 

தகவல்: மத்திய மாநில சங்கங்கள்