நல்ல தரமான மருத்துவமனைகளில், கட்டணமில்லா சிகிச்சை வசதி கிடைப்பதில்லை என பல இடங்களில் இருந்து, BSNL ஊழியர் சங்கத்திற்கு புகார்கள் வந்துக் கொண்டே உள்ளன. முன்னர் பல வருடங்களாக நிர்வாகம், மருத்துவமனைகளுக்கு கட்டணங்களை கட்டாத காரணத்தால், பல தரமான மருத்துவமனைகள், BSNLன் EMPANELMENTல் இருந்து விலகிச் சென்று விட்டன. தற்போது, அந்த நிலை மாறி விட்டது. ஆனால் பல மாநிலங்களிலும், மாவட்டங்களிலும், தரமான மருத்துவமனைகளை, கட்டணமில்லா சிகிச்சை வழங்குவதற்கான, BSNLன் EMPANELMENTகளுக்கு கொண்டு வருவதற்கு தேவையான அக்கறையான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, இந்த பிரச்சனை தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என 25.05.2024 அன்று, BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்