தவறான ஊதிய நிர்ணயத்தின் காரணமாக ஊழியர்களுக்கு கொடுத்த பணத்தை தவறாக பிடித்தம் செய்வதில் CAT உத்தரவை அமலாக்குவதில் கால தாமதத்தை சுட்டிக்காட்டி, அந்த உத்தரவை விரைவில் அமலாக்க வேண்டும் என கார்ப்பரேட் அலுவலகத்திற்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்.
ஒரு ஊழியருக்கு அதிகமாக வழங்கப்பட்ட தொகையை, தவறாக பிடித்தம் செய்வது தொடர்பாக, சண்டிகர் அமர்வு மத்திய தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊழியர்கள் எந்த ஒரு தவறான விண்ணப்பமும் கொடுக்காத போதும், நிர்வாகம் அக்கறையற்று தவறாக ஊதிய நிர்ணயம் செய்துள்ளது என, நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது. மேலும் ஊதியம் நிர்ணயம் செய்வதில் நிர்வாகம் செய்த தவறிற்காக, ஊதிய பிடித்தம் என்ற பளுவை ஊழியர்களின் மீது செலுத்தக் கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு பெற்ற இரண்டு மாதங்களுக்குள், வழக்கு தொடுத்துள்ளவர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திருப்பி வழங்க வேண்டும் என BSNL நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இந்த பிரச்சனைக்கு வழிகாட்டுதல் வேண்டி பஞ்சாப் மாநில நிர்வாகம், கார்ப்பரேட் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளது. நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமலாக்க வேண்டும் என வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கம், கார்ப்பரேட் அலுவலகத்தின் PGM(Estt)க்கு, 13.05.2024 அன்று கடிதம் எழுதி உள்ளது.
தோழர் ஜான் வர்கீஸ்
பொதுச்செயலாளர் (பொறுப்பு)
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்