Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, May 16, 2024

DIRECTOR (HR) உடன் BSNL ஊழியர் சங்கம் சந்திப்பு

 


14.05.2024 அன்று BSNLன் DIRECTOR(HR) திரு கல்யான் சாகர் நிப்பானி அவர்களை BSNL ஊழியர் சங்கத்தின் சார்பில் தோழர் அனிமேஷ் மித்ரா தலைவர், தோழர் C.K.குண்டண்ணா AGS., தோழர் அஷ்வின் குமார் OS ஆகியோர் சந்தித்தனர்.  DIRECTOR(HR)உடன் திருமிகு அனிதா ஜோஹ்ரி PGM(SR) மற்றும் திரு S.P. PGM (Estt) GM (TECHNICAL TRAINING) ஆகியோரும் உடன் இருந்தனர்.  

இந்தக் கூட்டத்தில் கீழ் கண்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன:-

1)   அதிகார பூர்வ சந்திப்பின் தவறான MINUTES:- 

19.03.2024 அன்று DIRECTOR(HR)உடன் நடைபெற்ற அதிகார பூர்வ சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட தவறான MINUTESக்கு தங்களின் எதிர்ப்பை BSNL ஊழியர் சங்கம் பதிவு செய்தது.  அந்த அதிகார பூர்வ சந்திப்பு இணக்கமாகவும், சாதகமாகவும் நடைபெற்றதை தலைவர்கள் சுட்டிக் காட்டினர்.  ஆனால், பின்னர் நிர்வாகம் வெளியிட்ட MINUTES தவறாக உள்ளதோடு, உண்மையில் அந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்களும், எடுக்கப் பட்ட முடிவுகளும் தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக 14.05.2024 அன்று BSNL ஊழியர் சங்கம் எழுதிய கடிதம் வந்ததென்று கூறிய DIRECTOR(HR), BSNL ஊழியர் சங்கம் எழுதிய ஆட்சேபனைக் கடிதத்தை கவனித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என PGM(SR)க்கு உத்தரவிட்டார்.

2)  பஞ்சாப் மாநிலத்தில் ரத்து செய்யப்பட்ட JTO இலாகா தேர்வுகள் :-

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற JTO இலாகா தேர்வுகளை ரத்து செய்வதாக எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக வற்புறுத்தி வருகின்றது.  14.05.2024 அன்று நடைபெற்ற கூட்டத்திலும், நிர்வாகம், தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கடுமையாக வாதிடப்பட்டது.

இந்த பிரச்சனை ஏற்கனவே CMD BSNL உடன் விவாதிக்கப்பட்டு, எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை என DIRECTOR(HR) பதிலளித்தார்.  பஞ்சாப் மாநிலத்தில் இருந்த காலிப்பணியிடங்கள், சீரமைப்பு திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒழிக்கப்பட்டு விட்டது எனவும் அவர் தெரிவித்தார்.  மேலும், தற்போதைய தேதியில், பஞ்சாப் மாநிலத்தில் JTOக்கள் உபரியாக உள்ளனர் என்றும், எனவே, JTO இலாகா தேர்வுகள் ரத்து செய்வது என்ற முடிவை மறு பரிசீலனை செய்ய இயலாது என்றும் தெரிவித்தார்.

3) மொபைல் தொலைபேசிகள் வழங்குவதில், ஊழியர்கள் புறக்கணிக்கப்படுவது:- 

மொபைல் தொலைபேசிகள் வழங்குவதில் காட்டப்படும் பாரபட்சத்திற்கு தங்களின் எதிர்ப்பை, BSNL ஊழியர் சங்க தலைவர்கள் தெளிவாக தெரியப்படுத்தினர்.  சமீபத்தில், அதிகாரிகள் வாங்கும் மொபைல் தொலைபேசிக்கான விலையை, நிர்வாகம் கணிசமாக உயர்த்தி உள்ளது.  அதே சமயம், இந்த பிரச்சனையில், ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.  இது தொடர்பாக, உறுதியான ஒரு கடிதத்தை, BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு அனுப்பியுள்ளது.  14.05.2024 அன்று நடைபெற்ற கூட்டத்திலும், இந்த பிரச்சனை வலுவாக எழுப்பப்பட்டு, ஊழியர்களுக்கும், மொபைல் தொலைபேசி வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கேட்டுக் கொண்டது. 

இந்த பிரச்சனையில் BSNL ஊழியர் சங்கத்தின் கருத்துக்களை பொறுமையாக கேட்டுக் கொண்ட DIRECTOR(HR), இந்த பிரச்சனையை கவனிப்பதாக உறுதி அளித்தார். 

 4) இணையருடன் இணைவது என்ற அடிப்படையில் கோரப்பட்ட விருப்ப மாற்றல்களை பரிசீலனி செய்ய வேண்டும்:- 

இணையருடன் இணைவது  என்ற அடிப்படையில் கோரப்படும் விருப்ப மாற்றல்கள் தொடர்பாக DoP&T வெளியிட்டுள்ள உத்தரவுகளை, குறிப்பாக JE கேடரில், BSNL நிர்வாகம் அமலாக்க அமல்படுத்துவது இல்லை என ஒவ்வொரு சமயத்திலும், BSNL ஊழியர் சங்கம், நிர்வாகத்தை குற்றம் சாட்டி வருகின்றது.

14.05.2024 அன்று நடைபெற்ற சந்திப்பின் போதும், இந்த பிரச்சனையை எழுப்பிய BSNL ஊழியர் சங்கம், இணையருடன் இணைவது என்ற அடிப்படையில், விதி 8ன் கீழ் கோரப்பட்டுள்ள மாற்றல் பிரச்சனைகளை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

இது போன்ற ஊழியர்களின் பெயர்களை பெற வேண்டும் என PGM (ESTT)க்கு DIRECTOR(HR) உத்தரவிட்டார்.  இதில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நமது சங்கத்திற்கு DIRECTOR(HR) உறுதி அளித்தார்.

5) சீரமைப்பு திட்டத்தை மறு பரிசீலனை:- 

சீரமைப்பு திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்துக் கொண்டுள்ளது.  சீரமைப்பு திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பதவிகளை நிர்வாகம் ரத்து செய்து விட்டதால், காலிப்பணியிடங்கள் இல்லை என்று கூறி பல மாநிலங்களில் JTO மற்றும் JE இலாகா தேர்வுகள் நடைபெறுவதில்லை என BSNL ஊழியர் சங்கம் புகார் கூறி வருகின்றது.  பதவிகளை உருவாக்குவதற்கான அளவீடுகள் தளர்த்தப்பட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரி வருகின்றது. 14.05.2024 அன்று நடைபெற்ற கூட்டத்திலும், சீரமைப்பு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற BSNL ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை, நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என கோரப்பட்டது. 

கார்ப்பரேட் அலுவலகம், இந்த பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக கூறிய DIRECTOR(HR), இந்த பணி விரைவில் நிறைவு பெறும் என்று உறுதி அளித்தார்.  இதற்கான முன்மொழிவுகளை வழங்க வேண்டும் என  நமது சங்கத்தை கேட்டுக் கொண்டார்.     

6)  விடுபட்ட விளையாட்டு வீரர்களுக்கு பதவி உயர்வு:- 

விடுபட்ட விளையாட்டு வீரர்களுக்கான பதவி உயர்வு பிரச்சனையை, தொடர்ச்சியாக BSNL ஊழியர் சங்கம் எழுப்பி வருகின்றது.  மீண்டும், 14.05.2024 அன்று நடைபெற்ற சந்திப்பின் போதும், DIRECTOR(HR) இடம், விடுபட்ட ஊழியர்களுக்கு விரைவில் வழங்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.

இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என DIRECTOR(HR) உறுதி அளித்தார்.

தோழர் ஜான் வர்கீஸ் 
பொதுச்செயலாளர் (பொறுப்பு)

தகவல்: மத்திய மாநில சங்கங்கள்