சங்ககிரி கிளையின் முன்னணி ஊழியர், தோழர் J.V. வெங்கடாச்சலம், TT., Phones, எடப்பாடி, வருகிற 31.05.2024 அன்று இலாக்கா பணி நிறைவு செய்கிறார். BSNLEU சங்ககிரி கிளை சார்பாக, எடப்பாடியில், சிறப்பான பணி நிறைவு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு, 28.05.2024 அன்று இனிதே நடைபெற்றது.
BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள், AIBDPA, TNTCWU தோழர்களோடு திரளாக கலந்து கொண்டோம். பணி நிறைவை முன்னிட்டு, மாவட்ட சங்கத்திற்கு ரூ5000 மற்றும் மாநில சங்கத்திற்கு ரூ1000 நன்கொடை வழங்கினார் தோழர் வெங்கடாசலம்.
தோழரின் பணி நிறைவு காலம் சிறப்பாக அமைய, சேலம் மாவட்ட BSNLEU சங்கம் மனதார வாழ்த்துகிறது.