தொலை தொடர்பு வட்டங்களை இணைப்பது தொடர்பாக, தன்னிச்சையான முடிவுகளை எடுக்கக் கூடாது என BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம்
மேற்கு வங்க வட்டத்தை கொல்கொத்தாவுடனும், தமிழ்நாடு வட்டத்தை சென்னையுடனும் இணைப்பதற்கான ஒரு குழுவை, நிர்வாகம் உருவாக்கியுள்ளது. இது, இந்த நான்கு வட்டங்களிலும் உள்ள ஊழியர்களின் பணி நிலைமைகளில் ஒரு பாதிப்பை உண்டாகும் மிகப்பெரிய நடவடிக்கையாகும். எனினும், இந்த பிரச்சனை தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன், எந்த ஒரு விவாதத்தையும் நிர்வாகம் நடத்தவில்லை. இதற்கு முன்னரும் கூட, ஊழியர்களை பாதிக்கும் பிரச்சனைகளின் மீது நிர்வாகம், தன்னிச்சையாக முடிவெடுத்திருந்ததற்கு, BSNL ஊழியர் சங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இருந்த போதும், மேலே கூறப்பட்டுள்ள வட்டங்களை இணைப்பது என்கின்ற தன்னிச்சையான முடிவை, மீண்டும் நிர்வாகம் எடுத்துள்ளது.
எனவே, இந்த வட்டங்களை இணைப்பதற்கான முடிவை மேற்கொள்வதற்கு காரணமாக இருந்த விவரங்களை தெரிவிக்க வேண்டுமென BSNL ஊழியர் சங்கம், 04.06.2024 அன்று, CMD BSNLக்கு கடிதம் எழுதி உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களோடு கலந்தாலோசிக்காமல், எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கப்படக் கூடாது என்றும், CMD BSNLஇடம் BSNL ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்