BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E. கோபால் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா, 22.06.2024 அன்று, சேலம் குஜராத்தி சமாஜ் மண்டபத்தில், பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவிற்கு தோழர் S. ஹரிஹரன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி செயலர் தோழர் K. ராஜன் அனைவரையும் வரவேற்றார்.
வெளிநாடு பயணம் முடித்த கையோடு தோழர் S. செல்லப்பா அகில இந்திய உதவி பொதுச் செயலர், விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில் BSNL நிறுவனத்தின் இன்றைய நிலை, ஊதிய மாற்றம், ஓய்வூதியர்கள் சம்பந்தமான விஷயங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை விளக்கிப் பேசினார்.
மாநிலத் தலைவர் தோழர் A. பாபுராதாகிருஷ்ணன், மாநில செயலர் தோழர் P. ராஜு ஆகியோரும் விழா பேருரை வழங்கினார்கள். AIBDPA மாநிலச் செயலர் தோழர் R. ராஜசேகர், TNTCWU மாநிலச் செயலர் தோழர் M. சையத் இத்ரீஸ் ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கினார்கள்.
சேலம் வணிகப்பகுதி பொது மேலாளர் திருமதி டாக்டர் C. P. சுபா அவர்கள், BSNL உயர் அதிகாரிகளுடன் வந்து விழாவில் முழுமையாக கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கினார்கள். திரு D. தியாகராஜன், DGM (F), திரு C. வினோத், AGM HR., திரு G. சேகர், AGM NWOP., திருமதி C. தனலட்சுமி, DE MEY., திரு V. செந்தில், AGM., AT., திரு P. பொன்ராஜ், AGM TXMN உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
நம் அழைப்பை ஏற்று, சேலம் மாவட்டத்தில், KG போஸ் அணியை கட்டமைப்பதற்கு பெரும் உதவி புரிந்த மூத்த தொழிற்சங்க தலைவர் தோழர் M. நாராயணசாமி, மற்றும் தோழர் S. தமிழ்மணி, DS., AIBDPA ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். அதேபோல், சகோதர சங்க அமைப்புகளான SNEA மாவட்டச் செயலர் தோழர் K. சீனிவாசன், AIGETOA மாவட்டச் செயலர் தோழர் B. மணிக்குமார், AIBSNLEA மாவட்டச் செயலர் தோழர் V. சண்முகசுந்தரம், TEPU மாவட்ட செயலர் தோழர் P. கிருஷ்ணமூர்த்தி, FNTO மாவட்ட செயலர் தோழர் C. கமலக்கூத்தன் ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். SEWA BSNL சார்பாக மாவட்ட செயலர் தோழர் ஜெயக்குமார் தலைமையில் தோழர்கள் வருகை புரிந்து வாழ்த்திவிட்டு சென்றார்கள்.
நேர நெருக்கடி காரணமாக, பேச வாய்ப்பு வழங்க முடியாவிட்டாலும், விழாவில், மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் K. சீனிவாசன் (சென்னை) M. பாபு (கிருஷ்ணகிரி), S. செல்வராஜன், (பெருந்துறை) G. உமாராணி (தர்மபுரி) ஆகியோர் விழாவில் கலந்து கொண்டார்கள். BSNLEU மாவட்ட செயலர்கள் தோழர்கள் சூசை (நெல்லை) ஸ்ரீதர் (தூத்துக்குடி) கிருஷ்ணன் (தர்மபுரி) பாலு (ஈரோடு) ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டு, மாவட்ட செயலரை கௌரவப்படுத்தினார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலர் தோழர் மேவை சண்முகராஜா, CITU மாநில குழு உறுப்பினர் தோழர் R. வெங்கடாபதி இருவரும் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். CPIM சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் குணசேகரனும் விழாவில் கலந்து கொண்டார்.
நமது மாவட்டத்தின் மூத்த தொழிற்சங்க தலைவர்கள் தோழர்கள் PKB, KPR, பழனி, விஜயன், KMS, அழகிரி, சுதாகரன், KRG, நேதாஜி, எடப்பாடி நாராயணன், சண்முகம், ஆத்தூர் சின்னசாமி, குமாரசாமி, திருச்செங்கோடு ராஜலிங்கம், ராசிபுரம் PMR, ஓமலூர் ராமசாமி, கவுசல்யன், சேலம் நகர பன்னீர், காளியப்பன், பொன்ராஜ், கணேசன், என பல தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். மேனாள் BSNL உயர் அதிகாரிகள் திருவாளர்கள் கோவிந்தராஜ், தங்கவேல், P. N. ராஜகோபால், கண்ணன் பாலா என பலர் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
TNTCWU மாவட்ட செயலர் M. செல்வம் மற்றும் மாநில பொருளாளர் தோழர் C. பாஸ்கர் இருவரும் ஒப்பந்த ஊழியர்களோடு திரளாக வந்து, மாவட்ட செயலருக்கு மிகப்பெரிய பூமாலை அணிவித்து, கௌரவப்படுத்தினார்கள். ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் திரளாக வரவேற்பு குழுவோடு இணைந்து பணியாற்றியது பாராட்டுக்குரிய விஷயம்.
மாவட்டச் செயலர் ஏற்புரை வழங்கிய பின், மத்திய சங்கத்திற்கு ₹5000, மாநில சங்கத்திற்கு ₹5000, சேலம் மாவட்ட சங்கத்திற்கு ₹5000, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்ட குழுவிற்கு ₹5000 நன்கொடை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற விருந்து உபசரிப்பில், சுமார் 380 விருந்தினர்கள், உணவு அருந்தியதாக வரவேற்பு குழு தகவல் தெரிவித்தது. BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகளும், கிளைச் செயலர்களும், முன்னணி தோழர்களும், JCM உறுப்பினர்களும்,பம்பரமாக சுழன்று, வரவேற்பு குழுவோடு இணைந்து, அற்புதமாக விருந்தினர்களை நல்ல முறையில் கவனித்தார்கள். திருமண வரவேற்பு போல், வாயிலில் நின்று, வந்தவர்களுக்கு சந்தனம் வழங்கி, பூக்கள் கொடுத்து, நோட்டீஸ் வழங்கியது சிறப்பாக இருந்தது. மாவட்ட தணிக்கையாளர் தோழர் லாவண்யா மற்றும் நமது பெண் தோழர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மாவட்ட பொருளாளர் தோழர் M. சண்முகம் நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார். விழாவில் கலந்து கொண்ட BSNLEU - AIBDPA - TNTCWU மத்திய, மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகள், தோழமை சங்க நிர்வாகிகள், சகோதர அமைப்புகள், BSNL GM மற்றும் உயர் அதிகாரிகள், ஓய்வூதியர்கள் ஒப்பந்த ஊழியர்கள், BSNLEU உறுப்பினர்கள் என அனைவருக்கும், சேலம் மாவட்ட சங்கம் தனது நன்றிகளை உரித்தாக்குகிறது.