பல்வேறு ஊழியர்களின் கேடர்களுக்கான கடமைகளையும், பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. முன்னர், தபால் தந்தி துறையிலும், தொலை தொடர்பு துறையிலும், இது போன்று கடமைகளும், பொறுப்புகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டு விளக்கப்பட்டு இருந்தன. ஆனால், BSNL உருவான பின்பு, நிர்வாகம், பல்வேறு கேடர்களுக்கான கடமைகளையும், பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்க வில்லை.
இது ஊழியர் கேடர்களின் கடமை மற்றும் பொறுப்புகள் தொடர்பாக பல விளக்கம் தரக்கூடிய தெளிவற்ற நிலையே உள்ளது. உதாரணமாக, JE கேடரில் உள்ளவர்களை, BBM (BHARAT BUSINESS MANAGER) பணிகளை செய்ய கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். MANAGER என்கிற பதமே, அது அதிகாரிகளின் பொறுப்பு என்பதை தெளிவாக தெரிவிக்கின்றது. ஆனால், அந்த பணிகளை JEக்களின் மீது திணிக்கப் படுகின்றன. ஊழியர் கேடர்களின் கடமைகளும், பொறுப்புகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டு கூறப்படாததாலேயே இவ்வாறு நிகழ்கிறது.
ஊழியர் கேடர்களின் கடமைகளையும் பொறுப்புகளையும், விரைவாக வரையறுத்து தெரிவிக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், மீண்டும் 29.05.2024 அன்று CMD BSNLக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய, மாநில சங்கங்கள்