BSNL நிலங்களையும், கட்டிடங்களையும் பணமாக்கல் தொடர்பான தொலை தொடர்பு துறையின் செயலரின் கடிதம் பல சந்தேகங்களை கிளப்பி உள்ளது- அது தொடர்பாக தொலை தொடர்பு துறையின் செயலர் மற்றும் CMD BSNLக்கு, BSNL ஊழியர் சங்கம் கடிதம்
நாடு முழுவதும், மிக முக்கியமான இடங்களில், BSNLன் இடங்களும், கட்டிடங்களும் விற்பனைக்கு உள்ளது தொடர்பாக, தொலை தொடர்பு துறையின் செயலாளர், அனைத்து செயலாளர்கள் மற்றும் முதன்மை செயலாளர்களுக்கு, சமீபத்தில் ஒரு கடிதம் எழுதி உள்ளார். இந்தக் கடிதம், BSNLஇடம் பணம் இல்லாததால், இந்த நிலங்களும், கட்டிடங்களும் விற்பனை செய்யப்படுகிறதோ என்ற நியாயமான சந்தேகங்களை, ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கிளப்பி உள்ளது. இது தொடர்பாக, தொலை தொடர்பு துறையின் செயலருக்கும், CMD BSNLக்கும், கீழ்கண்ட கோரிக்கைகளை எழுப்பி, BSNL ஊழியர் சங்கம் ஒரு கடிதம் எழுதியுள்ளது.
1) நிலங்கள் மற்றும் கட்டிடங்களை விற்பனை செய்யும் போது, அந்த பணம் BSNLக்கு வரவேண்டுமே தவிர, அரசாங்கம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
2) முக்கியமான இடங்களில் உள்ள நிலங்களையும், கட்டிடங்களையும் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக, அந்த முக்கியமான இடங்களில் உள்ள கட்டிடங்களில் பணியாற்றும் ஊழியர்களை, நகரம் மற்றும் மாநகரங்களின் புறநகர் பகுதிகளுக்கு மாற்றக் கூடாது.
3) முக்கியமான பகுதிகளில் உள்ள ஊழியர் குடியிருப்புகளில், குடியிருக்கும், ஊழியர்களையும், ஓய்வூதியர்களையும், அங்குள்ள சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக, கட்டாயப்படுத்தி காலி செய்யக் கூடாது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்