நிர்வாகத்துடன் சாதாரண மற்றும் அதிகார பூர்வ பேச்சு வார்த்தைகளிலும், தேசிய கவுன்சில் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்ட ஊழியர்களின் முக்கியமான பிரச்சனைகள், இன்னமும் தீர்வு காணப்படாமல் உள்ளன. இந்த பிரச்சனைகளை, கடமைக்கு விவாதிக்கும் நிர்வாகம், இதன் மீது ஒரு அக்கறையற்ற போக்கையே கடைபிடிக்கின்றது. எனவே நிர்வாகம், இந்த பிரச்சனைகளை தீர்வு காணாமலேயே உள்ளது. சின்ன சின்ன பிரச்சனைகளில் கூட, ஊழியர்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே நிர்வாகம் நடத்துகின்றது.
”மனித வள சீரமைப்பு” என்ற பெயரில், ஊழியர்களின் பதவி உயர்வு வாய்ப்புகளை ஒழித்துக் கட்டுகின்றது. மனித வள சீரமைப்பின் விளைவாக, பதவிகளை எல்லாம் உபரி என அறிவித்து விட்டு, பல மாநிலங்களில் எந்த ஒரு காலிப்பணியிடங்களும் இல்லாமல், பெயரளவில் JTO, JE மற்றும் TT இலாகா தேர்வுகள் நடத்தப் படுகின்றன. அந்த மாநிலங்களுக்கு கோரப்படும் நியாயமான மாற்றல்களும் நிராகரிக்கப்படுகின்றன.
மேலும், நிறுவனத்தின் பணிகள், பெருமளவில் வெளியாட்களுக்கு OUTSOURCING செய்யப் படுகின்றன. இது ஊழியர்களின் எதிர்காலத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றது. எனவே, இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட, BSNLEU மற்றும் SNATTA சங்கங்கள் முடிவு செய்துள்ளன. கோரிக்கை சாசனத்துடன் ஒரு இணைந்த மகஜர், CMD BSNLக்கு கொடுக்கப் பட்டுள்ளது.
முதல் கட்டமாக, 12.06.2024 அன்று, உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்திற்கான அறைகூவல் விடப்பட்டுள்ளது. கோரிக்கைகள் தீர்வு காணப்படவில்லை எனில், போராட்டங்கள் தீவிரப்படுத்தப் படும்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்
CMDக்கு வழங்கப்பட்ட போராட்ட பிரகடனம் காண இங்கே சொடுக்கவும்
கடிதம் தமிழாக்கம் காண இங்கே சொடுக்கவும்