ஊழியர்கள் தனது சங்கத்தை மாற்றிக் கொள்வதற்கான சாளரம் திறப்பதற்கான உத்தரவை கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தற்போதுள்ள கார்ப்பரேட் அலுவலக உத்தரவின் படி, ஆண்டுக்கு ஒரு முறை ஊழியர்கள் தங்களின் சங்கத்தை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான சாளரம், ஜூன் 16ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை திறந்திருக்கும். இந்த ஆண்டு, 16.06.2024 முதல் 15.07.2024 வரை, இந்த சாளரத்தை திறந்து வைப்பதற்கான உத்தரவை, 03.06.2024 அன்று கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, BSNL ஊழியர் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கிளை சங்கங்களை, மாவட்ட சங்கம் கேட்டுக் கொள்கிறது. NE ஊழியர்கள், தங்களின் சங்கத்தை மாற்றிக் கொள்ள, மத்திய சங்கம் வெளியிட்டுள்ள படிவத்தை பயன் படுத்த வேண்டும். ERPயில் நாம் நேரடியாக போட வேண்டியது இல்லை.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய, மாநில சங்கங்கள்