BSNLன் 4G மற்றும் 700 MHz அலைக்கற்றையினை பயன்படுத்தி 4G திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தோடு TEJAS வலைத்தளங்களின் மூலம் உருவாக்கப்பட்ட MANN திட்டம் ஆகியவற்றின் தோல்வி தொடர்பாக தங்களின் கவலையை தெரிவித்து, BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதி உள்ளது.
இந்த தோல்வி நமது சேவைத்திறனையும், BSNLக்கு தொடர்புடையவர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. அதன் ஒரு பகுதிதான் IIT மும்பையின் தேர்வுகளின் தேதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டியதாயிற்று. மேலும், தற்போதுள்ள மொபைல் தொலைபேசிகளில் 50 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளவைகளால், 700 MHz அலைக்கற்றைகளை பயன்படுத்த முடியாது. இது 4G துவக்கத்திற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண, முழுமையான திட்ட மதிப்பீடு, திறமையான வளங்கள் ஒதுக்கீடு, நமக்குள் உள்ள திறன்களை பலப்படுத்துவது மற்றும் கேந்திர மறு மதிப்பீடு ஆகியவற்றின் மூலம் BSNLன் வளர்ச்சியையும், சேவையின் தரத்தையும் உறுதி செய்ய வேண்டுமென இந்த கடிதத்தில் BSNL ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய, மாநில சங்கங்கள்