உடனடியாக BSNLன் 4G துவக்கத்தை உறுதி செய்க - உரிய நேரத்தில் அதன் 5G மேம்படுத்துதலை செய்க என மத்திய தொலை தொடர்பு அமைச்சருக்கு, CITU கடிதம்.
சமீபத்தில் தனியார் பல தொடர்பு நிறுவனங்கள் தங்களின் கட்டணங்களை கடுமையாக உயர்த்தி உள்ளது. இந்தப் பின்னணியில், பொதுமக்களும், நம் நாட்டின் சாதாரண ஏழை எளிய மக்களின் நலன்களின் மீது அக்கரை கொண்ட அமைப்புகளும், BSNL நிறுவனத்தின் 4G மற்றும் 5G சேவைகளை துவக்க, அரசாங்கம் உதவுவதன் மூலம் அதனை பலப்படுத்த வேண்டும் என வலுவாக நினைக்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக மத்திய தொழிற்சங்கங்களில் முக்கியமான சங்கமாக CITUவின் பொதுச் செயலாளர் தோழர் தபன் சென், மத்திய தொலைதொடர்பு அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். 05.07.2024 அன்று அவர் எழுதிய கடிதத்தில், BSNL நிறுவனத்திடம் 4G மற்றும் 5G இல்லாத காரணத்தால் தான், மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களால், அளவுக்கு அதிகமாக கட்டணத்தை உயர்த்த முடிந்துள்ளது என்பதை தோழர் தபன் சென் சுட்டிக்காட்டி உள்ளார். BSNL நிறுவனம் உடனடியாக தனது 4G சேவைகளை துவக்குவதையும், உரிய நேரத்தில் 5G சேவைகளாக மேம்படுத்துவதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
அக்கறையுடன் இந்தப் பிரச்சினையை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரிடம் எடுத்த CITU சங்கத்திற்கு, BSNL ஊழியர் சங்கம் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய, மாநில சங்கங்கள்