Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, July 25, 2024

புதிய CMDஐ, BSNLலில் உள்ள அனைத்து சங்கங்களும் வரவேற்றுள்ளன


BSNL CMD ஆக புதியதாக பொறுப்பேற்றுள்ள திரு ராபர்ட் ஜெரால்டு ரவி அவர்களை, BSNLEU, NFTE, SNEA, AIGETOA, BTEU, SEWA மற்றும் AIBSNLEA சங்கங்களின் பொதுச்செயலாளர்களும், மத்திய சங்க நிர்வாகிகளும் வரவேற்றனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திரு ரவி, MTNL பகுதிகளில்,  குறிப்பாக அதிக வருவாய் தரும் மும்பை மற்றும் டெல்லியில் BSNL சேவை தருவதின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.  மனித வள மற்றும் மூன்றாவது ஊதிய மாற்றம் தொடர்பாக பேசுகையில்,  அவர் 25 சதமானம் சந்தை பங்கீடு (MARKET SHARE) என்கிற இலக்கை அடைவதன் மூலம், வரும் மார்ச் மாதத்தில், வளமான நிறுவனமாக BSNLஐ மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அவர் நிர்ணயித்துள்ள இலக்கை அடைவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவித்த தொழிற்சங்க நிர்வாகிகள், மூன்றாவது ஊதியம் மாற்றம் உள்ளிட்ட மனித வள பிரச்சனைகளை தீர்வு காண வேண்டியது அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டினர். மூன்றாவது ஊதிய மாற்றம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளை தீர்வு காண, நிர்வாகம் திறந்த மனதுடன் உள்ளதாக திரு ரவி உறுதியளித்தார். திரு ரவி அவர்களின் தலைமையின் கீழ் BSNL ஒரு புதிய உச்சத்தை அடையும் என நாம் நம்புகிறோம்.

இந்தக் கூட்டத்தில் BSNL ஊழியர் சங்கம் சார்பாக அகில இந்திய தலைவர் தோழர் அனிமேஷன் மித்ரா அவர்களும் பொறுப்பு பொதுச்செயலாளர் தோழர் ஜான் வர்கீஸ் அவர்களும் பங்கேற்றனர்.

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU மத்திய, மாநில சங்கங்கள்