Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, August 5, 2024

தளமட்ட போராட்டத்திற்கு புறப்பட்டு வா என் தோழா!

மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

நாள்: 06.08.2024,  செவ்வாய்க்கிழமை, 

நேரம்: நண்பகல் 12.00 மணி முதல்,

இடம்: சேலம் பொது மேலாளர் அலுவலகம்.

சேலம் மாவட்ட  BSNL நிர்வாகத்தின் தன்னிச்சையான,  அடாவடித்தனமான, கண்மூடித்தனமான உத்தரவின் அடிப்படையில், சேலம் மெயின் தொலைபேசி நிலைய, LMR அறை, பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. காலம் காலமாக ஊழியர்கள், ஓய்வூதியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்த LMR அறை, சில கல் நெஞ்சகாரர்களின் பொய் புகார்கள் அடிப்படையில், இழுத்து மூடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் நாம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் இல்லை. நிர்வாகத்தின் பிடிவாதம் குறையவில்லை. 

இந்தப் பின்னணியில், கடந்த 01.08.2024 அன்று BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின், "கிளைச் செயலர்கள் கூட்டம்", மாவட்ட சங்க அலுவலகத்தில், நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்த பிரச்சனை ஆழமாக விவாதிக்கப்பட்டது. ஊழியர்களின் உணர்வுகளை மதிக்காத நிர்வாகத்தை எதிர்த்து, தளமட்ட போராட்டம் நடத்த வேண்டும் என  ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது. மாநில சங்கத்தோடும் ஆலோசித்தோம். மாநில சங்கம் கிளைச் செயலர்கள் கூட்ட முடிவை வரவேற்றது. மேலும் ஒரு நாள் தளமட்ட போராட்டம் நடத்தி பயன் இல்லை என்று சொன்னால், வருகிற 13.08.2024 அன்று முழு நேர தர்ணா போராட்டம் நடத்தவும் ஆலோசனை வழங்கியுள்ளது. மாநில சங்கமும்,  பிரச்சனையை தீர்வு காண, மாநில நிர்வாகத்தை வலியுறுத்தும். 

நம்முடைய உரிமைகளை பறிக்கக் கூடிய மாவட்ட நிர்வாகத்தின் அடாவடி போக்கை எதிர்த்து, வருகிற 06.08.2024 செவ்வாய்க்கிழமை அன்று, மதியம் 12.00 மணி முதல் சேலம் GM  அலுவலகத்தில், மதிய உணவு இடைவேளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தளமட்ட போராட்டத்திற்கு, கோப கணலோடு, போராட்ட களம் காண, புறப்பட்டு வா என் தோழா என தோழமையோடு அழைக்கிறோம்.

நமது மாவட்டத்தில் பாரம்பரியமாக, எந்த விதமான போராட்டமாக இருந்தாலும், அது CoC சார்பாக நடத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில், CoC சார்பாக நடத்தப்படக்கூடிய இந்த போராட்டத்திலும், AIBDPA, TNTCWU சங்கத் தோழர்களும், திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தோழமையோடு  கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
E. கோபால்,
கன்வீனர், CoC