சேலம் மாவட்ட நிர்வாகத்தின் அடாவடி, அராஜக, அநாகரிக செயல்பாடாக, மெயின் தொலைபேசி நிலைய LMR அறை கடந்த 22.07.2024 அன்று பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதை கண்டித்தும், உடனடியாக LMR அறையை திறக்க வலியுறுத்தியும், உரிமைப் போர் நேற்று (06.08.2024) சேலம் GM அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
CoC சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தோழர்கள் S. ஹரிஹரன் (BSNLEU), M. மதியழகன் (AIBDPA) K. ராஜன் (TNTCWU) கூட்டுத் தலைமை பொறுப்பை ஏற்றனர். போராட்டத்தை துவக்கி வைத்து, BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் R. ரமேஷ் துவக்கு உரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து AIBDPA மாவட்ட உதவி செயலர் தோழர் B. சுதாகரன், மாநில உதவி செயலர் தோழர் T. பழனி உள்ளிட்ட தோழர்கள் வாழ்த்தி பேசினர். AIBDPA மாவட்டச் செயலர் தோழர் S. தமிழ்மணி மற்றும் BSNLEU மாவட்டச் செயலர் தோழர் E. கோபால் ஆகியோர் கண்டன பேருரை வழங்கினார்கள்.
போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். தோழர் P. தங்கராஜூ, AIBDPA மாவட்ட பொருளர் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.