13.08.2024 அன்று நடைபெற்ற அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், ஊழியர்களின் ஊதிய மாற்றம் மற்றும் அதிகாரிகளின் சம்பளம் மாற்றம் ஆகிய பிரச்சனைகளின் மீது திரு ரவி A ராபர்ட் ஜெரால்டு CMD BSNL அவர்களிடம், இன்று 20.08.2024 அன்று மனு ஒன்று வழங்கப்பட்டது.
தோழர் P. அபிமன்யு, GS, BSNLEU, தோழர் சந்தேஸ்வர் சிங், GS, NFTE, தோழர் M.S. அடசுல், GS, SNEA, தோழர் வீர பத்திர ராவ், தலைவர், AIGETOA, தோழர் N.D. ராம், GS, SEWA BSNL, தோழர் L.N. சுக்லா, தலைவர், BTEU BSNL, NTR, தோழர் மனோஜ் சிங், GS, AIGETOA, தோழர் ரேவதி பிரசாத், AGS, ATM BSNL மற்றும் தோழர் சுமித் சவுனி, GS, CBOWA ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதிகாரிகளின் சம்பளம் மாற்றம், BSNL இயக்குனர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டு, DoTயின் ஒப்புதலுக்கு, ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது என்பதை தலைவர்கள் தெரிவித்தனர். இந்தப் பிரச்சனை DoTயில் தேங்கி கிடக்கிறது என்றும், அதனை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தை பொறுத்தவரை நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்ட ஊதிய விகிதங்களில் இருந்து, நிர்வாக தரப்பு பின் வாங்குவதால், இதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ள அந்த முட்டுக்கட்டையை நீக்க வேண்டும் என CMD BSNL ஐ கேட்டுக்கொண்டனர்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட CMD BSNL, இதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய, மாநில சங்கங்கள்