Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, September 12, 2024

செவ்வணக்கம் தோழரே!

ஒப்பற்ற போராளி தோழர் சீதாராம் யெச்சூரி மறைந்தார்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான, தோழர் சீதாராம் யெச்சூரி இன்று (12.09.2024) உடல் நலக்குறைவால், டெல்லி AIIMS மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

BSNL ஊழியர்களுடைய ஊதிய உயர்வு பிரச்சினை,  BSNL நிறுவனத்தை பாதுகாக்க கூடிய இயக்கங்களில், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும், BSNL ஊழியர்களோடு தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருந்தவர் தோழர் சீதாராம் யெச்சூரி.  BSNL ஊழியர், ஓய்வூதியர், ஒப்பந்த ஊழியர்  இயக்கத்தில்,போராட்டத்தில், பங்கேற்ற, வழிகாட்டிய ஒரு மகத்தான தலைவர் தோழர் தோழர்.சீதாராம் யெச்சூரி.

கடந்த சில நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி நம்மை விட்டு மறைந்தார் தோழர் சீதாராம் யெச்சூரி

தோழர் யெச்சூரி மறைவிற்கு, சேலம் மாவட்ட BSNLEU சங்கம் தனது செவ்வணக்கங்களை உரித்தாக்குகிறது.

வருத்தங்களுடன்,
E.கோபால், 
மாவட்ட செயலர்