BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின், செயற்குழு கூட்டம், 24.12.2024 அன்று, சேலம் செவ்வை தொலைபேசி நிலைய, கூட்ட அரங்கில், சிறப்பாக நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர் S. ஹரிஹரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, சங்க கொடியை, விண்ணதிரும் கோஷங்களுக்கு இடையே, மாவட்ட உதவி செயலர் தோழர் K. ராஜன் ஏற்றி வைத்தார். பின் கூட்ட அரங்கில், மாவட்ட உதவி தலைவர் தோழர் P. செல்வம், அஞ்சலி உரை நிகழ்த்த, செவ்வை கிளை செயலர் தோழர் N. சிவகுமார் அனைவரையும் வரவேற்றார்.
ஆய்படு பொருள் ஏற்புக்கு பின், மாநில அமைப்பு செயலாளர் தோழர் R. ரமேஷ், செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். மாவட்டச் செயலர் தோழர் E. கோபால் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, அறிமுக உரை வழங்கினார்.
ஆய்படு பொருள் மீதான விவாதத்தில், 19 தோழர்கள் பங்கு பெற்றனர். விவாதத்திற்கு பதில் அளித்து, மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கினார். AIBDPA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி செயற்குழுவை வாழ்த்தி பேசினார். அமைப்பு ரீதியாக, முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் R. ராதாகிருஷ்ணன், நன்றி கூறி, கூட்டத்தை முடித்து வைத்தார். செயற்குழு கூட்டத்தை, சிறப்பாக நடத்திக் கொடுத்த, செவ்வை கிளைக்கு, மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்